பொழுதுபோக்கு

சர்வதேச மிஸ் ஆரா அழகிப்போட்டி...இந்தியா சார்பில் பங்கேற்பது யார்?

Tamil Selvi Selvakumar

துருக்கியில் மிகப்பிரமாண்டமாக நடைபெறும் சர்வதேச மிஸ் ஆரா அழகிப்போட்டியில் இந்தியா சார்பில் சென்னையை சேர்ந்த மாடல் அழகி அனுசிங் பங்கேற்க தேர்வாகியுள்ளார்.

மிஸ் ஆரா சர்வதேச அழகிப்போட்டி:

மிஸ் ஆரா சர்வதேச அழகிப்போட்டி கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் வருடந்தோறும் நடைபெற்று வருகிறது. அதன்படி, இந்த வருடத்திற்கான மிஸ் ஆரா சர்வதேச அழகிப்போட்டி நேற்றைய தினம் தொடங்கி வருகிற செப்டம்பர் 26 ஆம் தேதி வரை துருக்கியில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.

மாடல் அழகி அனுசிங்:

இந்த போட்டியில், சென்னையை சேர்ந்த அனுசிங் என்பவர் இந்தியா சார்பில் பங்கேற்க உள்ளார். சென்னையில் மாடலாக உள்ள அனுசிங், சென்னை நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜியில் பட்டம் பெற்றவர். இவர், 2022 ஆம் ஆண்டுக்கான மிஸ் சதர்ன் கிரவுன் எனப்படும் தென்னிந்திய அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

போட்டியில் பங்கேற்க தேர்வு:

இந்நிலையில் ருபாரு மிஸ் இந்தியா எலைட் அழகி போட்டியில் நேரடி நுழைவு வென்ற அனுசிங், ரூபாரு குழுமத்தால் மிஸ் ஆரா சர்வதேச அழகிப்போட்டியில் பங்கேற்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அந்த வகையில், மிஸ் ஆரா போட்டியில் இந்தியா சார்பில்  அனுசிங் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.