பொழுதுபோக்கு

டாப் 10 ஹீரோயின்கள் இவர்கள் தானா? முதலிடத்தில் சமந்தா!

இந்தியாவின் மிகவும் பிரபலமான மற்றும் ரசிகர்களால் அதிகமாக விரும்பப்பட்ட கதாநாயகிகள் யார் என்று பட்டியல் வெளியாகிய நிலையில், சமந்தா முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

Malaimurasu Seithigal TV

இந்தியாவின் திரையுலகம் மிகவும் பெரிதாக இருக்கும் நிலையில், தென்னிந்திய திரையுலகம் மீது அனைவரது கண்களும் படர்ந்துள்ளன. அதனை மேலும் நிரூபிக்கும் வகையில், தற்போது ஒரு பட்டியல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் மிகவும் பிரபலமான நடிகைகளின் பட்டியலில், தென்னிந்திய நடிகைகள் தான் அதிக இடங்களைப் பிடித்துள்ளனர். அதிலும், சமந்தா தான் முதலிடத்தைப் பிடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

1. சமந்தா

2. ஆலியா பட்

3. நயந்தாரா

4. காஜல் அகர்வால்

5. தீபிகா படுகோனே

6. பூஜா ஹெக்டே

7. கீர்த்தி சுரேஷ்

8. கட்ரீனா கெய்ஃப்

9. கியாரா அத்வானி

10. அனுஷ்கா ஷெட்டி

பல வருடங்களாக நயந்தாரா மட்டுமே முதலிடத்தை வகித்துக் கொண்டிருந்த நிலையில், ஃபேமிலி மேன் என்ற வெப் சீரியசின் இரண்டாம் பாகத்தில் தமிழ் நக்சலைட்டாக நடித்த சமந்தா, அனைவரது மனதையும் கவர்ந்தார். சமந்தாவை அடுத்து, நயந்தாரா, காஜல் அகர்வால், பூஜா ஹெக்டே, கீர்த்தி சுரேஷ் மற்றும் அனுஷ்கா ஷெட்டி ஆகியோர் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். மிகவும் அதிகமாக சம்பளம் வாங்கும் நடிகைகளில் தென்னிந்தியாவில் நயந்தாரா முதலிடமும், சமந்தா இரண்டாவது இடமும் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

பாலிவுட் நடிகைகள் எப்போதும் உலக அளவில் பிரசித்தியானவர்களாகக் கருதப்படும் நிலையில், ஆலியா பட், தீபிகா படுகோனே, கட்ரீனா கெயிஃப் மற்றும் கியாரா அத்வானி ஆகியோர் மட்டுமே பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். மேலும், கியாரா இந்த பட்டியலில் இடம் பெற்றது இது தான் முதன் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

சிறந்த நடிகைகளை அங்கீகரிக்கும் வகையில் உருவாகிய இந்த பட்டியலை, இணையத்தில் நெட்டிசன்கள் பகிர்ந்து, தங்களது பிடித்தமான நடிகைகளை டாக் செய்து வாழ்த்தி வருகின்றனர்.