பொழுதுபோக்கு

சம்மர் சீசனை வரவேற்பதற்காக யாஷிகா போட்ட கவர்ச்சி புகைப்படம்! கமெண்ட்ஸ்களை தெறிக்கவிடும் நெட்டிசன்ஸ்!!

Tamil Selvi Selvakumar

தமிழில் ’கவலை வேண்டாம்’ என்ற படத்தின் மூலம் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் தான் யாஷிகா ஆனந்த். அதன்பின்னர் கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவான அடல்ட் காமெடி படமான 'இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தில் நடித்து இளைஞர்கள் மத்தியில் பிரபலம் ஆனார்.

அதனைத்தொடர்ந்து துருவங்கள் பதினாறு, ஜாம்பி உள்பட பல படங்களில் நடித்து வந்தார் யாஷிகா. அந்த நேரத்தில்  பிக்பாஸ் நிகழ்ச்சியில் அடியெடுத்து வைத்த யாஷிகா மக்களிடையே பிரபலமானார். ஆனால் அதற்கு பிறகு சரியாக எந்த பட வாய்ப்பும் அமையவில்லை.

அதற்கேற்றாற்போல் சமீபத்தில் நடந்த கார் விபத்தில் படுகாயமடைந்த யாஷிகா, நான்கு மாதங்களுக்கு மேலாக தீவிர சிகிச்சை எடுத்து வந்தார். பின் அதிலிருந்து மீண்டு வந்த அவர், தற்போது மீண்டும் படப்பிடிப்புகளில் கலந்து கொண்டு வருகிறார். அதுமட்டுமில்லாமல் சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருக்கும் யாஷிகா, தொடர்ந்து போட்டோஷூட்களை நடத்தி அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை தனது இணையத்தள பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது யாஷிகா பதிவிட்டுள்ள ஒரு புகைப்படம் இணையத்தில் செம வைரலாகி வருகிறது. விரைவில் சம்மர் சீசன் தொடங்கவுள்ளதையடுத்து, யாஷிகா கவர்ச்சியான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது இணையத்தில் வைரலாகி வரும் இந்தப் புகைப்படங்களை விட அதற்கு நெட்டிசன்கள் பதிவு செய்துள்ள கமெண்ட்ஸ்கள் தான் மிக சுவராஸ்யமாக உள்ளது என்றே சொல்லலாம்.