பொழுதுபோக்கு

3 முன்னணி ஹீரோயின்களை தட்டி சென்ற அசோக் செல்வன்!! யார் யார் அந்த ஹீரோயின்கள்?

அசோக் செல்வன் அடுத்த படத்தில் 3 முன்னணி ஹீரோயின்கள்..

Malaimurasu Seithigal TV

முன்னணி ஹீரோக்களின் ஹீரோயின்களை தட்டிச் சென்ற மகிழ்ச்சியில் உள்ளார் நடிகர் அசோக் செல்வன்.

சூதுகவ்வும், தெகிடி படங்களின் மூலம் பிரபலமான அசோக் செல்வன், கட்ந்த ஆண்டு பாக்ஸ் ஆபிஸில் தெறிக்க விட்ட படமான ஓ மை கடவுளே படம் மூலம் ரசிகர் பட்டாளத்தை விரிவுப்படுத்திக் கொண்டார். இந்த நிலையில் இவர் அடுத்ததாக அறிமுக இயக்குநர் கார்த்திக் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். பெயரிடப்படாத இந்த படத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக ரீத்து வர்மா, அபர்ணா பாலமுரளி, சிவாத்மிகா ஆகிய மூன்று ஹீரோயின்கள் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ரீத்து வர்மா, கடந்தாண்டு துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்து ஹிட் அடித்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், மற்றும் விக்ரமுக்கு ஜோடியாக துருவ நட்சத்திரம் போன்ற படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தவர். அதேபோல, அபர்ணா பாலமுரளி சூரரைப் போற்று படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

வயகாம் 18 ஸ்டூடியோஸ் நிறுவனமும், ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு, ஜார்ஜி சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார். கோபி சுந்தர் இசையமைத்துள்ள படத்தின் படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.