பொழுதுபோக்கு

விஷ்மயா வழக்கு தீர்ப்பு; ’உண்மையான ஆம்பளை அதை செய்ய மாட்டான்’ பாலாஜி முருகதாஸின் கருத்து..! வைரல்

வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்துகொண்ட விஷ்மயா வழக்கின் தீர்ப்பு குறித்து கருத்து கூறிய பாலாஜி முருகதாஸ் ’உண்மையான ஆம்பளை அதை செய்ய மாட்டான்’ என்று சர்ச்சைக்குரிய வகையில் கூறியுள்ளார்.

Tamil Selvi Selvakumar

கேரளாவை சேர்ந்த விஷ்மயா என்ற பெண் வரதட்சனை கொடுமையால் மன அழுத்தத்திற்கு ஆளாகி தற்கொலை செய்துக்கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு கடந்த சில மாதங்களாகவே நடைபெற்று வந்தது. அதற்கு முற்றுபுள்ளி வைக்கும் விதமாக சமீபத்தில் இந்த வழக்கின் தீர்ப்பு வெளியானது. அதன்படி இந்த வழக்கில் விஷ்மயாவின் கணவர் கிரண்குமார் தான் குற்றவாளி என நீதிமன்றம் தீர்பளித்து, அவருக்கு 10 ஆண்டுகளுக்கு சிறை தண்டனையும், 12.5 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்தது. இதனையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பு மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு குறித்தும், இந்த தீர்ப்பு குறித்தும் பிக்பாஸ் போட்டியாளரில் ஒருவரான பாலாஜி முருகதாஸ் கருத்து தெரிவித்துள்ளார். பிக்பாஸ் வீட்டில் கூட அனைவரிடமும் இவருக்கு ஏற்பட்ட சண்டை கூட இவரின் கருத்தினால் தான் இருக்கும். அந்த அளவிற்கு இவர் தன் கருத்தினை துணிச்சலுடன் எடுத்துரைப்பார். இதனால் இவருக்கென்று தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது.

அந்த வகையில் தற்போது விஷ்மயா வழக்கின் தீர்ப்பு குறித்து கருத்து கூறிய இவர், ‘உண்மையான ஒரு ஆண் வரதட்சனை வாங்க மாட்டார் என்றும் அவன் சுயமரியாதை மற்றும் சுய வருமானத்தால் மட்டுமே வாழ்வார் என்றும் கூறியுள்ளார். மேலும் பெண்களுக்கு அறிவுரை கூறிய அவர், ’உங்களை ஒரு சொத்தாகவோ, பொருளாகவோ நினைப்பவர்களிடம் இருந்து விலகி இருங்கள்’ என்று கூறியுள்ளார். பாலாஜி முருகதாஸின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருவதால் பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.