பொழுதுபோக்கு

ஹாட் பிகினி போட்டோஸ் போட்டு இளம் நெஞ்சங்களை பாடாய் படுத்தும் பீஸ்ட் நடிகை...

Malaimurasu Seithigal TV

மிஷ்கின் இயக்கிய முகமூடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான பூஜா ஹெக்டே இப்போது தென்னிந்திய சினிமாவிலும், பாலிவுட்டிலும் முன்னணி நடிகை. தெலுங்கு படங்களில் அதிகமாக நடித்த பூஜா இப்போது பாலிவுட்டிலும் பிஸியாக நடிக்கிறார். பான் இந்திய படமான ராதே ஷ்யாம் படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாகவும், தமிழில் விஜய்யுடன் பீஸ்ட், தெலுங்கில் சிரஞ்சீவியுடன் ஆச்சார்யா என பிஸியாகவே இருக்கிறார்.

சினிமாவை போன்றே சமூக வலைத் தளங்களிலும் பிசியாக இருப்பவர் பூஜா ஹெக்டே. அடிக்கடி தனது ஹாட் ஓட்டோஸ் மற்றும் நீச்சல் உடை போட்டோஸ் பதிவிட்டு பரபரப்பாக்குவார். தற்போது அவர் மாலத்தீவில் தனது விடுமுறையை கழித்து வருகிறார். அங்கு எடுக்கப்பட்ட படங்களை பதிவேற்றி வருகிறார்.

இதற்கிடையில் பூஜா மாலத்தீவு கடலில் ஸ்கூபா டைவிங் எனப்படும் ஆழ்கடல் நீச்சலுக்கு சென்று வந்துள்ளார். ஆழ்கடலில் நீந்தும் போட்டோஸ் வெளியிட்டுள்ளார். அதோடு நான் நீமோவையும், அவரது நண்பர்களையும் கண்டுபிடித்தேன். அவர்கள் அழகா இருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார். நீமோ என்பது பிரபல அனிமேஷன் படமான பைன்டிங் நீமோ படத்தின் ஹீரோவான மீன். பூஜா ஹெக்டேவின் ஆழ்கடல் நீச்சல் படங்கள், ரசிகர்களை சூடேற்றும் விதமாக உள்ள பிகினி போட்டோஸ் வைரலாக பரவி வருகிறது.

ஏற்கனவே தன்னுடைய பிகினி ஹாட் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேற்றி வந்த இவர், தற்போது விதவிதமான கவர்ச்சியில் உடையில்... போட்டோக்களை வெளியிட்டு இளம் நெஞ்சங்களை பாடாய் படுத்தி வருகிறார்.