பொழுதுபோக்கு

பீஸ்ட் படத்தின் சண்டைக் காட்சி புகைப்படம் வைரல்..!!

பீஸ்ட் படத்தின் சண்டைக் காட்சியின் புகைப்படம் இணையதளத்தில் தீயாய் பரவி வருகிறது.

Malaimurasu Seithigal TV

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் விஜய்- பூஜா ஹெக்டே ஆகியோர் நடிப்பில் உருவாக்கி வரும் படம் பீஸ்ட். இப்படம் மிக பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வருகிறது.

இந்நிலையில் இப்படத்தில் ஷூட்டிங் சமீபத்தில் முடிவடைந்துள்ளது. இன்று இயக்குனர் நெல்சன் மற்றும் விஜய் இருவரும் நட்புடன் கட்டியணைத்துக் கொள்ளும் புகைப்படம் வைரலானது. 

இப்படத்தின் புரமோஷன் வீடியோ விரைவில் வெளியாகும் எனக் கூறப்பட்டு வந்த நிலையில், பீஸ்ட் படத்தின் சண்டைக் காட்சிகள் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையதளத்தில் பரவி வருகிறது. இந்தச் சண்டைக்காட்சிகள் பிரமாண்டமான செட் போட்டு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.