உடல் ஆரோக்கியத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் நடிகர் அக்ஷய் குமார், அண்மையில் விமல் என்ற குட்கா நிறுவனத்தின் ‘பான் மசாலா’ விளம்பரத்தில் நடித்திருந்தது அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்தது.
மேலும் அவருடன் நடிகர் ஷாருக்கான், அஜய் தேவ்கானும் நடித்திருந்தனர். இதனை கடுமையாக விமர்சித்த அக்ஷய் குமார் ரசிகர்கள் மீம்ஸ்களையும், டிரோல் வீடியோக்களையும் வெளியிட்டனர்.
இந்தநிலையில் அந்த நிறுவனத்தின் தூதுவர் பொறுப்பிலிருந்து விலகிய அக்ஷய் குமார், ரசிகர்களிடம் மன்னிப்பு கோரினார்.