பொழுதுபோக்கு

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை ஆதரித்து... பாலிவுட் நடிகை கங்கணா ரணாவத் கருத்து...!

Malaimurasu Seithigal TV

2019-ல் நடந்ததுதான், 2024ம் ஆண்டும் நடக்கும் என நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை ஆதரித்து பாலிவுட் நடிகை கங்கணா ரணாவத் தெரிவித்துள்ளார். 

நடிகை கங்கணா ரணாவத் நடித்துள்ள எமர்ஜென்சி திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில், 
அவரது நடிப்பில் உருவாகியுள்ள அந்த படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.  இந்நிலையில், அந்த திரைப்படம் வெளியாகவுள்ளதை முன்னிட்டு, உத்தரகண்ட் மாநிலம் ஹரித்துவாரில் அவர் சாமி தரிசனம் செய்ய வந்திருந்தார். தரிசனம் முடிந்ததும், அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். 

அப்போது அவர், நாடாளுமன்றத் தேர்தல் குறித்து மக்களிடையே பல்வேறு விருப்பங்கள் இருந்தாலும், 2019 -ல் நடந்த அதேநிலைதான், 2024 -ம் ஆண்டில் தொடரும் எனக்  குறிப்பிட்டார். 

மேலும், 2019ம் ஆண்டு தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, 353 இடங்களில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியமைத்தது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறிருக்க, கங்கண ரனாவத் பாஜகவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.