பொழுதுபோக்கு

நாம் கல்யாணம் பண்ணிக்கலாமா? பிரபல நடிகையை அலற விட்ட ஐஸ்வர்யலட்சுமி!

Malaimurasu Seithigal TV

சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான  'ஆக்சன்'படத்தில் இரண்டாவது கதாநாயகியாக  நடித்த ஐஸ்வர்யா லட்சுமி தற்போது  தனுஷுக்கு ஜோடியாக ஜகமே தந்திரம் படத்தில் நடித்துள்ளார்.

விரைவில் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள இப்படத்தை  தொடர்ந்து மணிரத்னத்தின் பொன்னியின் செல்வனிலும் இணைந்துள்ள ஐஸ்வர்யா லட்சுமி,மலையாளத்தை போலவே தமிழிலும் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்து விட்டு வாய்ப்பு அதிகமாகவே உள்ளது. 

இந்நிலையில் சமூக வலைதளங்கள் மீது அதிக ஆர்வம் காட்டி வரும் ஐஸ்வர்யா லட்சுமி அவ்வப்போது தனது புகைப்படங்கள் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். 

தற்போது ஐஸ்வர்யா லட்சுமி, கேரள பாணியில் சேலைக்கட்டி எடுத்துக்கொண்ட  புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

இப்புகைப்படங்களைப் பார்த்த நடிகை  ஷ்ரத்தா ஸ்ரீநாத்,  ஐஸ்வர்யா லட்சுமியை ஏகத்துக்கும் புகழ்ந்து தள்ள,   அப்பதிவைப்பார்த்த ஐஸ்வர்யா லட்சுமி, ஷ்ரத்தா ஸ்ரீ நாத்திடம், "நாம்  இருவரும் திருமணம் செய்து கொள்ளலாமா" என ஜாலியாக பதிவிட, அவ்வளவு தான்.

அடுத்த சில நிமிடங்களில் இவர்களது உரையாடல் சமூக வலைத்தளங்களில் தீயாக பரவ, நெட்டிசன்கள் பலரும்,ஐஸ்வர்யா லட்சுமியின் இன்ஸ்ட்டா பக்கத்தில்,  'அவனா நீ'? என்றும்,   'என்ன ரெண்டுபேரும் கல்யாணம் பண்ண போறீங்களா?  

அது சரியா வராது. நாம் இருவரும் திருமணம் செய்தால் அது மிக சிறப்பாக இருக்கும் என  போட்டிபோட்டுக்கொண்டு ஐஸ்வர்யா லட்சுமியை கலாய்த்து வருகின்றனர்.