பொழுதுபோக்கு

என்னங்க சொல்றீங்க..பீஸ்ட் படத்தின் ரிலீஸ் தேதியை உறுதி செய்த இயக்குனர் விக்னேஷ் சிவன்?

பீஸ்ட் படத்தின் ரிலீஸ் தேதியை உறுதி செய்து விட்டாரா...இயக்குனர் விக்னேஷ் சிவன்?

Tamil Selvi Selvakumar

தளபதி விஜய் மற்றும் இயக்குனர் நெல்சன் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பீஸ்ட்’. அனிருத்தின் மாஸான இசையில் உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் ‘பீஸ்ட்’ படத்தின் ரீலிசுக்காக அதிகம் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் ரசிகர்களுக்கு இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான அரபிக் குத்து வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது, அதனை தொடர்ந்து நேற்று இப்படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலான ஜாலியோ ஜிம்கானா பாடல் 19 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.  ஆனால் ரசிகர்கள் அனைவரும் பீஸ்ட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பை தான் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் பீஸ்ட் படம் குறித்து ஸ்டோரி ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அடுத்த மாதம் வெளியாகவுள்ள படங்களை தேதியுடன் வரிசையாக பதிவிட்டுள்ளார். அதில் பீஸ்ட் படம் அடுத்தமாதம் 13 ஆம் தேதி என்றும்,  அவரின் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் 28 ஆம் தேதி என்றும் உள்ளது.

இவரின் இந்த ஸ்டோரி பதிவை பாரத்த ரசிகர்கள் இயக்குனர் விக்னேஷ் சிவனே பீஸ்ட் படத்தின் ரிலீஸ் தேதியை முடிவு செய்துவிட்டார் போல என்று பதிவிட்டு வருகின்றனர்.