பொழுதுபோக்கு

கொரோனா தொற்று பாதித்த பிரபல பின்னணி பாடகி உயிரிழப்பு...

ஒடிசாவில் கொரோனா பாதித்த பிரபல பின்னணி பாடகி தபு மிஷ்ரா, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Malaimurasu Seithigal TV

இந்தி, வங்காள மற்றும் பிற மொழிகளிலும் 500-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ள தபு மிஷ்ரா, கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினார். இந்நிலையில், அவரது ஆக்சிஜன் அளவு 45-க்கும் கீழ் குறைந்தது.  

இதனால் வீட்டு தனிமையில் இருந்த அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  100 சதவீதம் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி பாடகி தபு மிஷ்ரா மரணம் அடைந்துள்ளார். தபு மிஷ்ராவின் தந்தை கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்த நிலையில், 9 நாட்கள் கழித்து அவர் உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.