பொழுதுபோக்கு

மாளவிகா மோகனனுக்கு டப்பிங் கொடுத்த சின்னத்திரை பிரபலம்

Malaimurasu Seithigal TV

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் மாஸ்டர். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்து இருந்தார்.
 
தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய 5 மொழிகளில் விஜயின் மாஸ்டர் படம் வெளியானது. தமிழில் டப்பிங் கொடுத்தது ரவீனா என்பது அனைவருக்கும் தெரியும்.

ஆனால், மாஸ்டர் படத்தின் மலையாள பதிப்பில் மாளவிகா மோகனனுக்கு டப்பிங் கொடுத்தது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை சுஜிதா என்று தற்போது தெரிய வந்துள்ளது. இதனை சுஜிதாவே சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறி இருக்கிறார்