பொழுதுபோக்கு

”ஜெயிலர்” படத்திற்காக படங்களை தள்ளிபோடும் பிரபலங்கள்!!!!காரணம் இதுதானா?

Malaimurasu Seithigal TV

தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ‘ஜெயிலர்’ திரைப்படம் உருவாகி வருகிறது. இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். விஜயின் 'பீஸ்ட்' படத்திற்கு பிறகு நெல்சன், ரஜினியை வைத்து இயக்கும் படம் தான் இது.

ரஜினியின் 169-வது படமான ஜெயிலர் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. கடந்த ஆண்டு 'ஜெயிலர்' படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதில் ரஜினி 80'ஸ் லுக்கில் காட்சியளிக்கிறார். மேலும் இந்த படத்தில் ரஜினியுடன் கன்னட ஸ்டார் சிவராஜ் குமார், மலையாள ஸ்டார் மோகன்லால், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு என ஒரு திரை பட்டாளமே நடித்து வருகின்றது.தீவிரமாக நடைபெற்று வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. அவ்வப்போது இந்த படத்தில் ஷூட்டிங் காட்சிகள் குறித்து புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வரும் நிலையில், இதன் அடுத்த அப்டேட் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது

இந்த படம் இந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வரும் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகும் என கடந்த சில நாட்களுக்கு முன்னர் படக்குழு அதிகாரபூர்வமாக டீசர் வெளியிட்டு அறிவித்தது. ரஜினியின் ஜெயிலர் படத்தின் வெளியீட்டு அறிவிப்பு வீடியோ நம்பர் 1 ட்ரெண்டிங்கில் உள்ளது. இந்த நிலையில் முன்னதாக ஆகஸ்ட் மாதம் சிவகார்த்திகேயனின் 'மாவீரன்' படம் வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது. 'மண்டேலா' பட இயக்குநர் அஸ்வின் இயக்கும் இந்த படத்தில் யோகி பாபு, அதிதி சங்கர், மிஸ்கின் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இதன் மேக்கிங் வீடியோ அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் அந்த வீடியோவில், மாவீரன் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 11-ம் தேதி திரைக்கு வரவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த சூழலில் ரஜினியின் ஜெயிலர் படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து, சிவகார்த்திகேயனின் 'மாவீரன்' படமானது 'ஜெயிலர்' படத்துக்கு முன்கூட்டியே வரும் ஜூலை 14-ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிரடியாக அறிவித்துள்ளது.

.


அதே போல் அட்லீ இயக்கத்தில் பாலிவுட் ஸ்டார் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகும் 'ஜவான்' படம் இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்த படம் ஆகஸ்ட் 25-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில், தற்போது தேதி மாற்றப்பட்டு செப்டம்பர் 7-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.