நடிகர் அஜித் குமாரின் தாயார் மோகினி வயது மூப்பின் காரணமாக இன்று அதிகாலை உறக்கத்திலேயே இயற்கை எய்தினார். உடல்நலக்குறைவால் சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். நடிகர் அஜித் குமாரின் தாயார் இறுதி சடங்கு நாளை காலை சென்னையில் நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. துபாயில் இருக்கும் நடிகர் அஜித் குமார் இன்று சென்னை திரும்பவுள்ளார்.
நடிகர் அஜித்குமாரின் தாயார் இறுதி சடங்கு தனிப்பட்ட குடும்ப நிகழ்வாக நடைபெறும் என அவரது குடும்பம் தெரிவித்துள்ளது. அந்த அறிவிப்பில் “எங்கள் இல்லத்தின் இதயமும் ஆன்மாவுமாக விளங்கிய அஜித்தின் தாயார் இன்று அதிகாலையில் உறக்கத்திலேயே இயற்கை எய்தினார். அவரின் இறுதிச் சடங்கு தனிப்பட்ட குடும்ப நிகழ்வாகவே நடைபெறும். இறுதிச்சடங்கில் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்பார்கள்” என தெரிவித்துள்ளனர். இதன்மூலம் குடும்பதினர், உறவினர்கள் மற்றும் நெருக்கிய நண்பர்கள் மட்டுமே இறுதி சடங்கில் கலந்து கொள்ள அனுமதி என தெரிகிறது.
திரையுலகினர் அனைவரும் அஜித்தின் குடும்பத்தினருக்கு தங்களுது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். முன்னாள் முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள, தாயாரின் இறப்பு செய்தி வருத்தமளிப்பதாகவும், “உயிர் கொடுத்து, தான் உயரங்கள் தொட்டதைப் பார்த்து மகிழ்ச்சி கொண்ட அன்னையை இழந்து வாடும் திரு. அஜித் குமார் அவர்களைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை” என்று வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும், “அன்னையுடனான அழகிய தருணங்களே இந்தத் துயரில் அவர் மீளத் துணை நிற்க விழைகிறேன். திரு. அஜித்குமார் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலும் ஆறுதலும்” என தனது இரங்கல் செய்தியை பதிவு செய்தார் ஸ்டாலின்.
அதையடுத்து தமிழக முதல்வர் ஜோசேப் விஜய் அவர்கள், நடிகரும் நண்பருமான அஜித்குமாரின் தயார் இழப்பிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், “அருமை நண்பர் திரு. அஜித் குமார் அவர்களின் தாயார் திருமதி மோகினி அம்மையார் மறைவு செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். அவரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன். வாழ்வில் அனைத்து நிலைகளிலும் அரணாக இருந்து அரவணைத்த தாயாரை இழந்து வாடும் நண்பர் திரு. அஜித் குமார் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவுசெய்திருந்தார் முதல்வர் விஜய்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.