பொழுதுபோக்கு

விஜய்யின் பிறந்தநாள் முன்னிட்டு வெளியான காமன் டிபி... இணையத்தில் வைரல் 

விஜய்யின் பிறந்தநாள் ஜூன் 22ஆம் தேதி என்பதால் அவரது ரசிகர்கள் தற்போது முதலே சமூகவலைத்தளங்களில் கொண்டாட ஆரம்பித்துள்ளனர்.

Malaimurasu Seithigal TV

தற்போது விஜய் ரசிகர்கள் அவரது பிறந்தநாளை முன்னிட்டு அசத்தலான காமன் டிபி போஸ்டர்கள் உருவாக்கி வெளியிட்டு வருகின்றனர். 

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கி தளபதியாக வலம் வருபவர் விஜய். இந்தியா முழுக்க அவருக்கு பல லட்சம் ரசிகர்கள் உள்ளனர். கோலிவுட்டைத் தாண்டி மலையாளம் மற்றும் தெலுங்கிலும் அவரின் படங்களுக்கு பெரிய மார்க்கெட் உள்ளது. 

தற்போதெல்லாம் நடிகர்களின் பிறந்தநாள் வரும்போது அவர்கள் நடித்த படங்களை வைத்து அசத்தலான போஸ்டர்கள் வெளியிட்டு அதை அனைத்து ரசிகர்களும் அவரது பிறந்த நாள் அன்று தங்கள் வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் புரொபைல் பிக்சராக வைத்து வருகின்றனர். இந்த டிரென்ட் தற்போது தமிழகத்திலும் அதிகரித்து வருகிறது.

வரும் ஜூன் 22-ம் தேதி விஜயின் பிறந்தநாள் என்பதால் பல டிசைனர்கள் விஜயின் அசத்தலான போஸ்டர்கள் தயாரித்து விஜய் பிறந்தநாள் காமன் டிபி என்று வெளியிட்டு வருகின்றனர். அந்த போஸ்டர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.