பொழுதுபோக்கு

நடிகர் சித்தார்த் மீது ஐதராபாத் போலீசார் வழக்கு பதிவு.!!

பேட்மிண்டன் வீராங்கனை பற்றி சர்ச்சை கருத்து பதிவிட்ட நடிகர் சித்தார்த் மீது ஐதராபாத் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Malaimurasu Seithigal TV

பேட்மிண்டன் வீராங்கனை பற்றி சர்ச்சை கருத்து பதிவிட்ட நடிகர் சித்தார்த் மீது ஐதராபாத் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அண்மையில் பிரதமரின் பாதுகாப்பு குறைபாடு குறித்து டுவிட் செய்திருந்த பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலை, மிக மோசமாக விமர்சித்து சித்தார்த் டிவிட் செய்திருந்தார். இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

மேலும்  தேசிய மகளிர் ஆணையத்தின் அறிவுறுத்தலின் பேரில், சென்னை சைபர் கிரைம் போலீசார் அவரது டிவிட் பதிவு குறித்து விசாரணையை துவக்கியுள்ளனர்.

இந்த நிலையில் பாஜக பிரமுகர்கள் இருவர் அளித்த புகாரின் பேரில் சித்தார்த் மீது ஐபிசி பிரிவு 67 மற்றும் 509ன் கீழ் ஐதரபாத் போலீசார் வழக்கு பதிந்து விசாரணையை துவக்கியுள்ளனர்.