பொழுதுபோக்கு

குடும்பத்தில் 14 பேருக்கு கொரோனா தொற்று... வேதனையடையும் பிரபல இயக்குநர்

தனது குடும்பத்தில் உள்ள 14 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக இயக்குநர் ரத்தினகுமார் தெரிவித்துள்ளார்

Malaimurasu Seithigal TV

நடிகை அமலாபால் நடித்த ’ஆடை’ மற்றும் வைபவ், பிரியா பவானிசங்கர் நடித்த ‘மேயாதமான்’ உள்பட ஒருசில படங்களை இயக்கியவர் ரத்தினகுமார்.

இவரது குடும்பத்தை சேர்ந்த15 மாத குழந்தை முதல் 83 வயது பாட்டி வரை ஒட்டுமொத்தமாக 14 பேர்களுக்கும் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் கடந்த 20 நாட்களாக தான் கடும் மன உளைச்சலில் இருந்ததாக தனது தனது டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

தமிழ்த்திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தற்போது அனைவரும் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு விட்டதால் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாக கூறியுள்ளார்.

இது குறித்து இயக்குனர் ரத்தினகுமார் டுவிட்டரில் கூறியுள்ளதாவது,” 15 மாத குழந்தை முதல் 83 வயது பாட்டி வரை என் குடும்பத்தை சேர்ந்த 14 பேருக்கும் கொரோனா. அப்பா, பாட்டி, தம்பியின் மனைவி, என் மாமியார் என சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்தனர். கடந்த 20 நாட்களாக நேர்ந்த பல மன உளைச்சல்களை கடந்து இன்று மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியது வீடு’இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.