பொழுதுபோக்கு

“அப்பா மிகவும் நன்றாக நடித்திருந்தார்”- விக்ரம் படத்தில் கமலை ரசித்த ஷ்ருதி ஹாசன்:

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவான விக்ரம் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், அவரது மகள் சுருதி ஹாசன், தனது தந்தையை நினைத்தால் சந்தோஷமாக உள்ளது என கூறியுள்ளார். 

Malaimurasu Seithigal TV

விக்ரம் திரைப்படம் ஒரு மாதத்திற்கும் மேலாக வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஜூன் 3 ம் தேதி உலகம் முழுக்க பல திரையரங்குகளில் வெளியானது விக்ரம். இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. நடிகர் கமல்ஹாசன் உடன் விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா, நரேன் என பலர் நடிப்பில் வெளியாகி உள்ளது. இந்த ஆண்டில் வெளியான தமிழ் படங்களில், பல படங்கள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெற்றியை பெறாததால், நான் இருக்கிறேன் கவலை பட வேண்டாம் என சொல்லும்படி, லோகேஷ் கனகராஜ்- கமலாசன் கூட்டணியில், இந்த விக்ரம் திரைப்படம் நல்ல வெற்றியை பெற்று வருகிறது. அதோடு அதிக வசூலையும் ஈட்டி முதலிடத்திலும் உள்ளது. விக்ரம் படமானது இந்தியா மட்டுமல்லாமல் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், என பல நாடுகளிலும்  ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்று வருகிறது. 

110 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் தற்போது கிட்டத்தட்ட 450 கோடிகளுக்கு வசூல் செய்து ஹிட் அடித்த படங்களின் பட்டியலில் உள்ளது. மேலும் இந்த திரைப்படம் இந்த ஆண்டு கோலிவுட்டுக்கே கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுகிறது.  இப்படியான சூழலில் ரசிகர்கள், இந்த படத்தின் ott வெளியீடு எப்போது என கேட்டு வந்த நிலையில் ஜூலை 8ம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ott தளத்தில் வெளியாகிறது. 

இந்நிலையில், ஒரு நேர்காணலில் கலந்துகொண்ட கமல் ஹாசனின் மகள் சுருதி ஹாசன் விக்ரம் படம் பற்றியும், தந்தை பற்றியும் பேசியுள்ளார். இது பற்றி பேசிய சுருதி ஹாசன், " எனக்கு படம் மிகவும் பிடித்திருந்தது. அதோடு என் தந்தையை நினைத்தால் மகிழ்ச்சியாக உள்ளது. குறிப்பாக கொரோனா தொற்று காலங்களில் அனைவரும் கடந்து வந்த கடினமான காலத்திற்கு பிறகு, இவ்வளவு சிறப்பாகச் செயல்படும் படங்கள் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. நான் முற்றிலும் இந்த படத்தை ரசித்தேன். மேலும் இந்த இயக்குனரின் முந்தைய படங்களும் எனக்கு பிடித்திருந்தது. " என கூறியுள்ளார்.  

முன்பு தயாராகி வந்த சபாஷ் நாயுடு என்ற படம் தொடஙப்பட்டு அப்படியே விடப்பட்ட நிலையில், அது குறொத்த எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை. ஆனால், ஷ்ருதி ஹாசன் தற்போது பேசிய பேட்டியில், அது குறித்த ஒரு தகவலையும் பேசியது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. அதில், “சபாஷ் நாயுடு படத்தில் பல வருடங்களுக்குப் பிறகு அப்பாவுடன் இணைந்து பணி புரிந்தது மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால், அது பாதியிலேயே விடப்பட்டது.” எனக் கூறினார். இந்த நிலையில், கொடுத்த பேட்டியில் பேசியபோது தற்போது அந்த மீண்டும் தொடரலாம் என திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார். இதனால், ரசிகர்களுக்கு உற்சாகம் அதிகரித்துள்ளது.