பொழுதுபோக்கு

மாரியம்மன் கோவிலில் மாரியம்மா சாமி தரிசனம்

Malaimurasu Seithigal TV

துஷரா விஜயன்: இயக்குநர் பா.ரஞ்சித் அறிமுகப்படுத்திய நடிகை துஷரா விஜயன். இவர் சார்பட்டா பரம்பரை படத்தில் மரியம்மா என்கின்ற  கேரக்டரிலும், நட்சத்திரம் நகர்கிறது படத்தில் ரெனேவாக நடிப்பில் பிண்ணி பெடலெடுத்திருந்தார். மரியம்மா கேரக்டரில் பலரையும் கொள்ளை கொண்ட நபர் என்றே சொல்லலாம்.

நத்தம் மாரியம்மன் கோவிலில் நடிகை துஷரா விஜயன் சாமி தரிசனம்

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் மாரியம்மன் கோவிலில் மாசி பெருந்திருவிழா கடந்த 20 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது தொடர்ந்து சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி விரதம் தொடங்கினர். பக்தர்கள்  கோவிலுக்கு வந்து மாவிளக்கு, கரும்புத் தொட்டில், பொங்கல் வைத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர். திருவிழாவின் முக்கிய நிகழ்வான கழுகு மரம் ஏறுதல் மற்றும் பூக்குழி இறங்குதல் நிகழ்ச்சி மார்ச் 7ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் இன்று சார்பட்டா பட கதாநாயகி நடிகை துர்காவிஜயன் நத்தம் மாரியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.