பொழுதுபோக்கு

வசூல் வேட்டை நடத்திவரும் சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம்...! எவ்வளவு கோடி தெரியுமா..?

சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் 11 நாளில் 65 கோடியை வசூல் செய்து உள்ளது....

Tamil Selvi Selvakumar

சிபி சக்கரவர்த்தி புதிய இயக்குனராக தமிழ் சினிமாவில் அவதாரம் எடுத்திருப்பவர். இவர் உதவி இயக்குனராக பல படங்களில் பணியாற்றி இருந்தாலும் இப்போது தான் பிரபலமாகி உள்ளார். காரணம் அவர் சிவகார்த்திகேயனை வைத்து முதன்முறையாக இயக்கியுள்ள டான் திரைப்படம்தான்.

இப்படம் கடந்த மே 13-ம் தேதி பிரம்மாண்ட வெளியாகி இருந்தது. இப்படத்திற்கு சிவகார்த்திகேயனின் டாக்டரை படத்தை விட அதிக வரவேற்பு கொடுத்து வருகிறார்கள் ரசிகர்கள். படம் தமிழ்நாடு மட்டுமில்லாமல் வெளிநாடுகளிலும் நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

தற்போது படம் வெளியாகி 11 நாள் ஆன நிலையில் இதுவரை தமிழகத்தில் மட்டுமே படம் 65 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாம்.