மாரநாடு கருப்பணசாமி கோயிலில் தனுஷ் செய்த "சம்பவம்".. இதனால் தான் அரசியலில் ஒரு கை பார்த்துடலாம்-னு நினைக்கிறாரோ!? AI Enhanced
பொழுதுபோக்கு

மாரநாடு கருப்பணசாமி கோயிலில் தனுஷ் செய்த "சம்பவம்".. இதனால் தான் அரசியலில் ஒரு கை பார்த்துடலாம்-னு நினைக்கிறாரோ!?

மேலாதாளம் முழங்க ஆதரவாளர்களின் ஆர்ப்பரிப்புக்கு இடையே கருப்பண்ணா சாமிக்கு தனுஷ் 18 அடி அரிவாளை காணிக்கையாக கொடுத்தார்.

மாலை முரசு செய்தி குழு

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக உருவாகி வருகிறார் தனுஷ். கமர்ஷியலாக மட்டுமல்லாமல் கலை நயமான பாத்திரங்களிலும் நடித்து பாராட்டுகளைப் பெறுபவர். கடந்த சில ஆண்டுகளாக இயக்குநராகவும் பரிணமித்தார். பாடல்கள் எழுதுவது, பாடுவது என பல்கலை வித்தகராக இருக்கும் தனுஷ் அரசியலிலும் களமிறங்குவதாக சமீப காலத்தில் பேச்சுகள் எழுந்துள்ளன.

இந்த நிலையில் சிவகங்கை மாவட்டம், மாரநாடு கருப்பணசாமி கோயிலில் தனுஷின் அடுத்த பட (D56) பூஜை மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இதில் கலந்துகொள்வதற்காக நேற்று இரவு மதுரை வந்து சேர்ந்தார் தனுஷ். அப்போது அவரது ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானோர் திரண்டு மாலை, மரியாதையுடன் கோலாகலமாக வரவேற்றனர். வேல் உள்ளிட்ட பரிசுப்பொருட்களை வழங்கியுள்ளனர்.

D56 படக்குழு

இன்று காலையும் மாரநாடு கருப்பணசாமி கோயிலில் தனுஷை காண ஆயிரக்கணக்கில் ஆதரவாளர்கள் குவிந்தனர். மேலாதாளம் முழங்க ஆதரவாளர்களின் ஆர்ப்பரிப்புக்கு இடையே கருப்பண்ணா சாமிக்கு தனுஷ் 18 அடி அரிவாளை காணிக்கையாக கொடுத்தார்.

கூடியுள்ள ரசிகர்களுக்கு கரி விருந்தும் தயாராக உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

அரசியல் எதிர்பார்ப்புகள் நிலவும் சூழலில் தனுஷின் இந்த ஏற்பாடு கவனம் பெற்றுள்ளது. சில நாட்களுக்கு முன்னர் தேசிய விருது பெற்று திரும்பிய தனுஷிடம், அரசியல் கட்சியின் பெயர் குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது, மறுக்காமல் சிரித்துவிட்டு கடந்தார் தனுஷ்.

dhanush new flag launch

இத்துடன் கடந்த ஜூலை மாதம் தனுஷ் தனது ரசிகர் மன்றத்தின் கொடியை அறிமுகம் செய்ததும் குறிப்பிடத்தக்கது. சிவப்பு வெள்ளை நிறத்தில் நட்சத்திரம் மற்றும் தனுஷின் உருவம் கொண்ட அந்த கொடி அரசியல் வருகையை எடுத்துரைப்பதாகவே பார்க்கப்பட்டது.

லப்பார் பந்து இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் தனுஷின் அடுத்தப்பட படபிடிப்பு தொடங்கியுள்ளது. இதில் வடிவேலு, எஸ்.ஜே. சூரியா, பிரீத்தி முகுந்தன்  உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர். இந்த படத்துக்கு படையல் எனப் பெயர் வைத்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

ஏற்கெனவே தனுஷ் நடிப்பில் வெளியீட்டுக்கு தயாராக இருக்கும் ஓம் படத்துக்கு இசையமைத்துள்ள சாய் அபயங்கர் இந்த படத்துக்கும் இசைமைக்கிறார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்