ஹாலிவுட்டில் ’தி கிரே மேன்’ படப்பிடிப்பை முடித்து இந்தியா திரும்பினார் நடிகர் தனுஷ்.
தமிழில் முன்னனி நடிகராக வலம் வருபவர் தனுஷ். தனுஷின் கர்ணா, ஜகமே தந்திரம் ஆகிய படங்கள் வெளிவந்து ரசிகர்கள் கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில், ஹாலிவுட்டில் ’தி கிரே மேன்’ என்னும் படத்தில் நடிக்கும் வாய்ப்பு தனுஷுக்கு கிடைத்தது.
அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார், அவெஞ்சர்ஸ் எண்ட்கேம், கேப்டன் அமெரிக்கா விண்டர் சோல்ஜர், சிவில் வார் போன்ற உலகப் புகழ்பெற்ற படங்களை இயக்கிய ரூஸோ சகோதரர்கள் இயக்கும் படம் ‘தி கிரே மேன்’.
கேப்டன் அமெரிக்கா கதாபாத்திரத்தில் கலக்கிய கிறிஸ் ஈவான்ஸ் மற்றும் ஆஸ்கர் விருதுக்கு தகுதி பெற்ற ரயன் காஸ்லிங் ஆகியோருடன் தனுஷும் இப்படத்தில் இணைந்தார்.
கொரோனா காரணமாக படப்பிடிப்பு தள்ளிப் போன நிலையில், சில மாதங்களுக்கு முன்பு துவங்கியது. பெரும் பொருட்செலவில் உருவாகும் இப்படம் அடுத்தாண்டு நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளம் மூலம் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.
படப்பிடிப்பிற்காக அமெரிக்கா சென்றிருந்த நடிகர் தனுஷ், அதனை முடித்து விட்டு இந்தியா திரும்பியுள்ளார். அமெரிக்காவில் இருந்து ஐதராபாத் சென்ற அவர், அங்கு நரேன் இயக்கும் ’டி 43’ என்ற படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ளார். இப்படத்தில் தனுசுக்கு ஜோடியாக மாஸ்டர் பட நாயகி மாளவிகா மோகனன் நடிக்கிறார்.