பொழுதுபோக்கு

நயன்தாராவை வைத்து படம் எடுப்பதாக வெளியான தகவல் வதந்தி - தோனி எண்டர்டெயின்மென்ட்!

Tamil Selvi Selvakumar

தமிழில் நயன்தாரா நடிக்கும் புதிய படத்தை தயாரிக்க உள்ளதாக வந்த தகவல் வதந்தி என தோனி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கிரிக்கெட் வீரர் தோனி தொடங்க இருக்கும் தயாரிப்பு நிறுவனத்தை ரஜினியின் முன்னாள் உதவியாளரான சஞ்சய் நிர்வகிக்கப் போவதாகவும், அதன் முதல் படத்தில் நயன்தாரா நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் இதனை தோனியின் தயாரிப்பு நிறுவனமான தோனி எண்டர்டெயின்மென்ட் மறுத்துள்ளது. அதன்படி சஞ்சய் உள்பட யாரையும் பணியமர்த்தவில்லை எனவும் போலியான செய்திகளை நம்ப வேண்டாம் எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.