பொழுதுபோக்கு

ஐஸ்வர்யா வெளியிட்ட முடிவால்! குஷியில் தனுஷ் ரசிகர்கள்!!

இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் அடுத்தக்கட்ட முடிவு தனுஷ் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

Tamil Selvi Selvakumar

இயக்குனர் ஐஸ்வர்யா மற்றும் நடிகர் தனுஷ் தங்களது விவாகரத்து அறிவிப்புக்குப் பின் இருவரும் தங்களுடைய பட வேலைகளில் பிசியாக ஈடுபட்டு வருகின்றனர். தனுஷ் நடிப்பில் சமீபத்தில் மாறன் படம் வெளியான நிலையில் , ஐஸ்வர்யா இயக்கத்தில் 'முசாபிர்' எனும் மியூசிக் ஆல்பம் விரைவில் ரிலீசாக உள்ளது.

இதனைத் தொடர்ந்து  ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அடுத்ததாக படம் இயக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. அதில் சிம்பு நடிப்பார் என வெளியான நிலையில் இது தனுஷ் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.  தனுஷை கடுப்பேற்ற தான் ஐஸ்வர்யா இத்தகைய முடிவை எடுத்திருப்பதாக ரசிகர்கள் சரமாரியாக விமர்சித்தனர். 

இதனிடையே சில தினங்களுக்கு முன் நடிகரும், இயக்குநருமான ராகவா லாரன்ஸை சந்தித்த ஐஸ்வர்யா தனது அடுத்த படத்தில் அவருடன் இணையவுள்ளது கிட்டதட்ட உறுதியாகியுள்ளது. இதனைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு அடைந்துள்ளனர்.