பொழுதுபோக்கு

இயக்குநர் ஷங்கர் மகளை தொடர்ந்து மீண்டும் களமிறங்கும் மற்றொரு இயக்குநர் வாரிசு...!!!

சங்கர் மகளை தொடர்ந்து ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான ராஜீவ் மேனனின் மகள் சினிமாவில் அறிமுகமாக உள்ளார்.

Malaimurasu Seithigal TV

இயக்குநர் சங்கரின் மகள் அதிதி. மருத்துவரான இவர் இயக்குநர் முத்தையாவின் இயக்கத்தில் கார்த்தி கதாநாயகனாக நடிக்கும் விருமன் படத்தில் அறிமுகமாக இருக்கிறார். படத்திற்கான வேலைகள் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான ராஜீவ் மேனனின் மகளும் சினிமாவில் அறிமுகமாக இருக்கிறார்.

இயக்குநர் ராமின் இயக்கத்தில் வெளியான தரமணி படம் மூலம் நாயகனாக அறிமுகமான வசந்த ரவி இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிக்கும் புதிய படத்தில் சரஸ்வதி கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் வெளியான சர்வம் தாளமயம் படத்தில் அவர் ஒரு பாடலுக்கு நடனமாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.