பொழுதுபோக்கு

"என் லவ் மற்றும் பேபி உடன் கடைசி சில நாட்கள்" விக்னேஷ் சிவனின் உணர்ச்சிகரமான பதிவு!

’காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படம் இன்னும் 3 நாட்களில் ரிலீசாக இருக்கும் நிலையில் ”காதலின் கடைசி வலி...” என இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது இணையதள பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

Tamil Selvi Selvakumar

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, லேடி சூப்பர் ஸ்டார் நயந்தாரா, சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “காத்துவாக்குல ரெண்டு காதல்”. ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படம் வருகின்ற 28 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அனிருத் இசையில் உருவாகியுள்ள இப்படம் வெளியாக இன்னும் ஒருசில நாட்களே உள்ள நிலையில், விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தளத்தில் ஒரு உணர்ச்சிகரமான பதிவை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், என் லவ் மற்றும் பேபி உடன் கடைசி சில நாட்கள். இந்த வலி தேவை தான். காதல் என்றாலே வலி இருக்கும். ஒரு திரைப்படம் வெளியாகும் முன் கடைசி சில நாட்கள் பிரசவ வலிக்கு இணையானது. அதுமட்டுமில்லாமல், இசையமைப்பாளர் அனிருத்துடன் தொடர்ச்சியாக ஒவ்வொரு காட்சியையும் மீண்டும் மீண்டும் பார்த்து வருகிறேன். இந்த படத்தில் அனைவரும் அருமையாக நடித்திருக்கிறார்கள். நேசத்துடன் இந்த படத்திற்காக அதிகம் உழைத்து உள்ளேன் இவ்வாறு அவர் தன் உணர்ச்சி பூர்வமான  பதிவை பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது இணையம் முழுவதும் வைரலாகி வருகிறது.