பொழுதுபோக்கு

"வலிமை" படத்திற்காக அஜித் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

வலிமை படத்திற்காக அஜித் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

Suaif Arsath

போனி கபூர் தயாரிப்பில் எச். வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் ஆக்க்ஷன் மற்றும் பாசம் கலந்து அசத்தலாக வெளியான படம் தான் "வலிமை".. இப்படம் பிப்ரவரி 24 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் வெளியானது.

ஆனால், எதிர்பார்த்த அளவிற்கு படம் இல்லை என ரசிகர்கள் புலம்பி வந்தனர். ஆனாலும் படத்தின் வசூலில் எந்த குறைபாடும் இல்லை. வலிமை படத்தின் வசூல் 200 கோடி ரூபாய் மேல் போய் விட்டது என்றெல்லாம் தகவல் வெளியானது. ஆனால், இதுவரை படத்தின் வசூல் எவ்வளவு என அதிகாரப்பூர்வமாக தகவல் எதுவும் வெளியாகவில்லை.

இந்நிலையில், வலிமை படத்திற்காக அஜித் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, வலிமை படத்திற்கு நடிகர் அஜித் குமார் 50 கோடி சம்பவம் பெற்றதாக கூறப்படுகிறது. இவரை தொடர்ந்து இயக்குனர் எச்.வினோத் 5 கோடி சம்பளம் வாங்கி உள்ளாராம்.