பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே, வீட்டுக்குள் நடக்கும் சண்டை சச்சரவுகள், நட்பு, காதல், மற்றும் பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்கள் நினைவுக்கு வரும். ஆனால், இந்த நிகழ்ச்சிக்கு வரும் பிரபலங்கள், எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் என்பது பலருக்கும் தெரியாது. இந்திய அளவில் பல மொழிகளில் நடத்தப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிக சம்பளம் வாங்கிய டாப் பிரபலங்கள் பற்றிய விவரங்கள் இங்கே.
பமீலா ஆண்டர்சன் (Pamela Anderson): பிக் பாஸ் வரலாற்றிலேயே மிக அதிக சம்பளம் வாங்கியவர் இவர்தான். வெளிநாட்டு நடிகையான இவர், சீசன் 4-ல் வெறும் மூன்று நாட்கள் மட்டுமே பிக் பாஸ் வீட்டில் இருந்தார். அதற்காக அவருக்கு ரூ. 2.5 கோடி சம்பளம் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ரிமி சென் (Rimi Sen): சீசன் 9-ல் கலந்துகொண்ட இந்த பாலிவுட் நடிகை, நிகழ்ச்சியில் சேருவதற்காகவே ரூ. 2 கோடி சம்பளம் வாங்கியுள்ளார்.
தி கிரேட் காலி (The Great Khali): உலகப் புகழ்பெற்ற மல்யுத்த வீரரான காலி, சீசன் 4-ல் கலந்துகொண்டார். இவருக்கு ஒரு வாரத்துக்கு ரூ. 50 லட்சம் சம்பளம் வழங்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்ரீசாந்த் (Sreesanth): சர்ச்சைக்குரிய கிரிக்கெட் வீரரான ஸ்ரீசாந்த், சீசன் 12-ல் பங்கேற்றார். இவரும் ஒரு வாரத்துக்கு ரூ. 50 லட்சம் சம்பளம் வாங்கியுள்ளார்.
கரண்வீர் போஹ்ரா (Karanvir Bohra): சீசன் 12-ல் இருந்த தொலைக்காட்சி நடிகர் கரண்வீருக்கு, ஒரு வாரத்துக்கு ரூ. 20 லட்சம் சம்பளம் கிடைத்ததாகக் கூறப்படுகிறது.
அலி கோனி (Aly Goni): சீசன் 14-ல் வைல்டு கார்டு போட்டியாளராக வந்த அலி கோனி, ஒரு வாரத்துக்கு ரூ. 16 லட்சம் சம்பளம் பெற்று, அந்நிகழ்ச்சியின் அதிக சம்பளம் வாங்கிய போட்டியாளர்களில் ஒருவரானார்.
தீபிகா கக்கர் (Dipika Kakar): சீசன் 12 வெற்றியாளரான தீபிகா, வாரத்துக்கு ரூ. 15 லட்சம் சம்பளம் பெற்றார்.
அங்கிதா லோகண்டே (Ankita Lokhande): சமீபத்தில் நடந்த சீசன் 17-ல், அங்கிதா வாரத்துக்கு ரூ. 11 முதல் 12 லட்சம் வரை சம்பளம் வாங்கியுள்ளார்.
சும்பல் தௌகீர் கான் (Sumbul Touqeer Khan): சீசன் 16-ல் கலந்துகொண்ட இளம் நடிகை சும்பல், அந்நிகழ்ச்சியின் அதிக சம்பளம் வாங்கிய போட்டியாளராக இருந்தார். அவருக்கு ஒரு வாரத்துக்கு சுமார் ரூ. 12 லட்சம் சம்பளம் கிடைத்தது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.