பொழுதுபோக்கு

RRR  படத்தை பார்த்துவிட்டு டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் இயக்குனர் பாராட்டு மழை:

இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான RRR  படத்தை பார்த்துவிட்டு டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் என்ற ஹாலிவுட் படத்தின் இயக்குனர் ஸ்காட் டெரிக்ஸ்ன், ஒரு அற்புதமான படம் என அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

Malaimurasu Seithigal TV

மார்ச் 25 ம் தேதி அன்று தெலுங்கின் இரு பெரும் நட்சத்திரங்களான ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் 
நடிப்பில் உருவான திரைப்படம் RRR. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் உருவான இந்த திரைப்படத்தை தெலுங்கு திரையுலகமே கொண்டாடியது. மேலும் படத்தில் ஆலியா பட், அஜய் தேவ்கன், ஒலிவியா மாரிஸ், சமுத்திரக்கனி என பல்வேறு நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இந்த திரைப்படம் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை தொடர்ந்து படம் வெற்றிகரமாக ஓடியது. ரிலீஸ் ஆன முதல் நாளில் மட்டுமே உலகம் முழுவதும் சேர்த்து ரூ. 230 கோடிக்கு மேல் வசூலித்திருந்தது. இரண்டாவது நாள் முடிவில், ரூ.340 கோடியை தாண்டி வசூலை குவித்தது. இதையடுத்து, மூன்றாவது நாள் முடிவில் 500 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து RRR  படத்தின் மொத்த செலவை மூன்றே நாளில் பெற்று தந்தது. படத்தின் பட்ஜெட் 300ல் இருந்து 350 கோடி வரை இருக்கும் என சொல்லப்பட்ட நிலையில், உலகம் முழுவதும் இப்படம் 1000 கோடி ரூபாய் க்கு மேல் வசூலித்துள்ளதாக அப்படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. அதனால் அதிக வசூல் செய்த இந்திய திரைப்படங்களில் ஒன்றாக RRR திரைப்படம் உள்ளது. 

இந்நிலையில், டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் என்ற ஹாலிவுட் படத்தின் இயக்குனர் ஸ்காட் டெரிக்ஸ்ன், ஒரு அற்புதமான படம் என அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். முன்னதாக தி VAMPIRE டைரிஸ் என்ற அமெரிக்க தொலைக்காட்சி தொடரின் கதாநாயகன் ஜோசப் மோர்கன் இந்த படத்தை பாராட்டி இருந்தார். ஹாலிவுட் பிரபலங்கள் RRR திரைப்படத்தை பாராட்டுவது இது முதல் முறை அல்ல.  பேட்மேன் பியாண்ட்   மற்றும் கேப்டன் அமெரிக்கா படத்தின் எழுத்தாளர், ஜாக்சன் லான்சிங் என பலரும் RRR படத்தை பற்றி பெருமையாக பேசி இருந்தார். அதே போன்று டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் படத்தின் திரைக்கதை ஆசிரியர், ராபர்ட் சி கார்கில் போன்றவர்களும் இந்த RRR படத்தை பாராட்டி பதிவிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

RRR என்பது 1920 களில் இந்தியாவில் நடந்த இரண்டு புரட்சியாளர்களின் கற்பனையான கதை. தி ஹாலிவுட் கிரிட்டிக்ஸ் அசோசியேஷன், மிட்ஸீசன் விருதுகளுக்கான சிறந்த படத்திற்கான RRR படத்தை பரிந்துரைத்திருப்பதால் இந்திய திரைப்படம் ஒன்றுக்கு இந்த விருது வழங்கப்படுவது இதுவே முதல் முறை என்பது கூடுதல் சிறப்பாக உள்ளது.