பொழுதுபோக்கு

மறைந்த புனித் ராஜ்குமாரின் கனவுப்படம்..!

மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் கனவுப்படமான கந்தத குடி திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

Malaimurasu Seithigal TV

கன்னட திரையுலகின் ஜாம்பவானாக வலம்வந்த நடிகர் புனீத் ராஜ்குமாரின் மரணம், அவரது ரசிகர்களை மட்டுமில்லாமல் இந்திய திரையுலகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவரின் இறப்பிற்கு பிறகு அவர் செய்த சமூக சேவைகள் ஒவ்வொன்றையும் அவரது ரசிகர்கள் சமூக வலைதலங்களில் பட்டியலிட தொடங்கினர். மேலும் அவரது ரசிகர்கள் பலரும் கண் தானம் செய்ய தொடங்கினர். அவர் இறந்து சில வாரங்களில்  கன்னட மாநிலத்தில் மட்டும் பத்தாயிரதிற்கும் மேற்பட்டோர் கண் தானம் செய்துள்ளனர். 

இந்நிலையில் அவரது தாயார் பர்வதம்மா ராஜ்குமாரின் பிறந்தநாளான இன்று  அவர் இறப்பதற்கு முன் நடித்த திரைப்படமான "கந்தத குடி" திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படம் நடிகர் புனீத் ராஜ்குமாரின் கனவு திரைப்படம் என்று அவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது.

இப்படத்திற்கு இசையமைப்பாளர் அஜநீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார். மேலும் நடிகர் புனித் ராஜ்குமாரே தன்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனமான பிஆர்கே நிறுவனத்தின் மூலம் இப்படத்தினை தயாரித்துள்ளார்.