துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள ஹே சினாமிகா படத்தின் இரண்டாவது பாடல் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
பிரபல நடன இயக்குனர் பிருந்தா கோபால் ஹே சினாமிகா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். இந்தப் படத்தில் துல்கர் சல்மான் கதாநாயகனாக நடித்துள்ளார்.
இந்தப் படத்திலிருந்து ஏற்கனவே அச்சமில்லை என்ற பாடல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில், இரண்டாவது பாடல் வெளியீடு குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.
இந்தப் பாடலின் டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று தெரிவித்துள்ளனர். வரும் 27-ம் தேதி பாடல் வெளியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.