பொழுதுபோக்கு

Blue Sattai Maran - னை நீங்களே உங்க மூஞ்சில...வறுத்தெடுத்த எனிமி பட தயாரிப்பாளர்...ஏன் தெரியுமா?

வலிமை படத்தை கலாய்த்து பேசிய மாறனுக்கு தக்க பதிலடி கொடுத்த எனிமி பட தயாரிப்பாளர்...

Tamil Selvi Selvakumar

இயக்குனர் எச்.வினோத், நடிகர் அஜித் மற்றும் போனிகபூர் கூட்டணியில் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு இடையே கடந்த மாதம் வெளியான திரைப்படம் தான் வலிமை. ஆனால் இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களையே அதிகமாக பெற்று வந்தது. 

இதற்கிடையில் வலிமை படத்தின் வசூல் விவரங்களை வெவ்வேறு விதமாக திரை விமர்சனங்களையும் பதிவிட்டு வருகின்றனர். இதில் முதலாக வலிமை திரைப்படம் வெளியானது முதல் இப்படத்தை விமர்சித்து வருபவர் தான் ப்ளூ சட்டை மாறன்.  அஜித் குறித்தும் வலிமை படம் குறித்தும் விமர்சிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார் மாறன். 

அந்த வகையில் வலிமை படம் குறித்து அவர் பதிவிட்டு இருந்த ஒரு விமர்சனத்திற்கு முக்கிய தயாரிப்பாளர் ஒருவர் சரியான பதிலடி கொடுத்துள்ளார். அது யாருன்னு பாக்குறீங்களா...Enemy உள்ளிட்ட படங்களை தயாரித்த வினோத் குமார் தான். 

அஜித் மற்றும் அவர் நடித்த வலிமை படத்தை கலாய்த்து பேசிய மாறனுக்கு தக்க பதிலடி கொடுக்கும் விதமாக, அவர் பதிவு ஒன்றை போட்டுள்ளார். 

அதில், " திரையுலகில் உள்ள அனைத்து சால்வை கூட்டமும் ஒன்றாய் இணைந்து பாராட்டியும் 50 லட்சம் கூட காலெக்ஷன் இல்லை ஆன்டி இந்தியன்-க்கு. ஆனால் 65 கோடிக்கு மேல் ஷேர் வந்த படத்தை கலாய்க்குறது நீங்களே உங்க மூஞ்சில மலாக்க படுத்து காரி துப்புறமாறி" என பதிவிட்டுள்ளார்.