படப்பிடிப்பின்போது நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் மயங்கி விழுந்த நிலையில் அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தனது நகைச்சுவை நடிப்பால் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார் பவர்ஸ்டார் சீனிவாசன். தொடர்ந்து இவர் கண்ணா லட்டு தின்ன ஆசையா உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். செக் மோசடி உள்ளிட்ட சில பிரச்சினைகளால் சிறைக்குச் சென்று வந்தாலும் அவர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், படப்பிடிப்பு ஒன்றில் நடித்து வந்தபோது அதிக ரத்த அழுத்தம் காரணமாக திடீரென்று மயங்கி விழுந்தார்.
இதையடுத்து படக்குழுவினர் அவரை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.