பொழுதுபோக்கு

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்த தயாரிப்பாளர் போனிகபூர்..! எதற்காக தெரியுமா?

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை பிரபல தயாரிப்பாளர் போனிகபூர் சட்டப்பேரவை வளாகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

Tamil Selvi Selvakumar

சூப்பர் ஸ்டாரின் 170வது படத்தையும், அஜித்தின் 61 வது படத்தையும் தயாரிக்கும் பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனிகபூர் புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து பேசினார்.

இச்சந்திப்பின்பேது, பெரிய பட்ஜெட் அளவிலான திரைப்படங்களை புதுச்சேரியில் எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கு தேவையான உட் கட்டமைப்புகளை புதுச்சேரியில் உருவாக்க வேண்டும் என்று முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.