பொழுதுபோக்கு

திரையில் வெளியானது மறைந்த கன்னட நடிகர் புனித்-தின் கடைசி திரைப்படம் - ரசிகர்கள் ஆரவார கொண்டாட்டம்

மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் கடைசியாக நடித்த 'ஜேம்ஸ்' திரைப்படம் அவருடைய பிறந்தநாளான நேற்று வெளியான நிலையில் ரசிகர்கள் ஆரவாரம் செய்து கொண்டாடி வருகின்றனர்.

Tamil Selvi Selvakumar

கன்னட திரையுலகில் பிரபல நடிகரான புனித் ராஜ்குமார் கடந்த ஆண்டு அக்டோபர் 29- ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். அவரது மறைவு குடும்பத்தினர் மட்டுமின்றி திரையுலகினர், ரசிகர்கள் என ஒட்டு மொத்த மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.

முன்னதாக புனித் ராஜ்குமார் ஜேம்ஸ் என்ற கன்னட திரைப்படத்தில் நடித்து வந்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் மரணமடைந்தார்.

இந்த நிலையில் கன்னட நடிகர் புனித் ராஜ்குமாருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அவர் கடைசியாக நடித்த 'ஜேம்ஸ்' திரைப்படம் அவருடைய பிறந்தநாளான நேற்று திரையரங்குகளில் திரையிடப்பட்டது.

அப்போது திரையரங்கு முன்பு இருந்த நடிகர் புனித்தின் பேனருக்கு பாலாபிஷேகம் செய்து ரசிகர்கள் ஆரவாரத்துடன் கொண்டாடி வருகின்றனர்.