பொழுதுபோக்கு

முதன் முதலாக வீட்டிற்கு வரும் பெண் குழந்தை: பூ பாதை அமைத்து வரவேற்ற தந்தை

6 மாத பெண் குழந்தையை தந்தை குடும்பத்தினர் பூ பாதை அமைத்து மலர் தூவி வரவேற்ற நெகிழ்வூட்டும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Malaimurasu Seithigal TV

6 மாத பெண் குழந்தையை தந்தை குடும்பத்தினர் பூ பாதை அமைத்து மலர் தூவி வரவேற்ற நெகிழ்வூட்டும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இன்றைய நவீன காலத்தில் ஆண்களுக்கு எல்லா வகையிலும் இணையானவர்கள் என்ற நிலை வந்துவிட்டது. அதுமட்டுமில்லாமல், அனைத்து துறைகளிலும் பெண்கள் தங்களை நிலைநாட்டி சாதித்தும் வருகின்றனர். இதனால் ஆண் குழந்தைகளை காட்டிலும் பெண் குழந்தைகளை தற்போது அனைவரும் விரும்ப தொடங்கி உள்ளனர். 

கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டம் உம்னாபாத் டவுன் பசவநகரை சேர்ந்தவர் ரோகித் மற்றும் இவரது மனைவி பூஜா. என்ஜினீயரான ரோகித் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.நிறைமாத கர்ப்பிணியாக இருந்த பூஜாவுக்கு கடந்த ஜனவரி மாதம் 26-ந் தேதி பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்ததும் பூஜா தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். தற்போது,குழந்தை பிறந்து 6 மாதங்கள் ஆன நிலையில், குழந்தையுடன் தனது கணவர் வீட்டிற்கு செல்ல முடிவு செய்துள்ளார்.அதன்படி நேற்று பூஜா தனது குழந்தையை தூக்கி கொண்டு கணவர் வீட்டிற்கு வந்த போது அவருக்கு இன்ப அதிர்ச்சி காத்து இருந்தது.பூஜாவையும், குழந்தையையும் பிரம்மாண்டமாக வரவேற்ப்பதற்காக கணவர் வீட்டார் பூ பாதை அமைத்து இருந்தனர்.

அந்த பூ பாதையில் குழந்தையை தூக்கி கொண்டு பூஜா நடந்து வர, ரோகித், அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பூஜாவையும், குழந்தையையும் பூ தூவி உற்சாமாக வரவேற்றனர். இதனை சற்றும் எதிர்பாராத பூஜா தன் குழந்தையை கொண்டாடும் விதத்தை கண்டு நெகிழ்ச்சியடைந்தார்.