பொழுதுபோக்கு

இயக்குநர் மனோபாலா உடலுக்கு திரைப் பிரபலங்கள் நேரில் அஞ்சலி...!

Tamil Selvi Selvakumar

மறைந்த நடிகரும், இயக்குநருமான மனோபாலா உடலுக்கு திரைப் பிரபலங்கள் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 


உடல்நலக் குறைவால் உயிரிழந்த நடிகரும், இயக்குநருமான மனோபாலாவின் உடல், பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில், நடிகர்கள் சிவக்குமார், டெல்லிகணேஷ், வெங்கட்பிரபு, மோகன், சித்தார்த், சாந்தனு, மோகன்ராம், இயக்குநர் மணிரத்தினம் மற்றும் நகைச்சுவை நடிகர், நடிகைகள், இயக்குநர்கள் கே.எஸ். ரவிக்குமார்,  ஆர்.கே. செல்வமணி, ஆர். எஸ். முருகதாஸ், ரமேஷ் கண்ணா, நடிகர் ராதாரவி, ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். 

அதேபோல், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.