தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்கும் நடிகர் தனுஷ், அடுத்தடுத்து பாலிவுட், ஹாலிவுட் தரத்திற்கு முன்னேறி உள்ளார். அதன்படி நடிகர் தனுஷ் ‘தி க்ரேமேன்’ என்ற ஹாலிவுட் திரைப்படத்தில் நடித்துள்ளார். ஆங்கிலத்தில் உருவாகியுள்ள இந்த படம் தமிழ் உள்பட ஒரு சில இந்திய மொழிகளிலும் வெளியாகவுள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில், புரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள இந்த படம் வருகின்ற ஜீலை மாதம் 22 ஆம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் இந்த படத்திலிருந்து நான்கு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகியுள்ளது.
நேற்று வெளியான நான்கு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களில் ஒன்றில் கூட தனுஷ் இடம்பெறாமல் இருப்பது தனுஷ் ரசிகர்களை அதிர்ச்சியில் உறையவைத்துள்ளது.