Dhanush political entry 
பொழுதுபோக்கு

“அரசியல் என்ட்ரி உறுதியாகிறதா?” தனுஷ் ரசிகர் மன்றம் வெளியிட்ட 5 தொகுதி பட்டியல்.. கோவையில் தொடங்கும் புதிய பயணம்!

தெற்கு மாவட்ட தலைமைக்கு உட்பட்ட நற்பணி இயக்கங்கள் செயல்படும் தொகுதிகள்

Vinvizhi Leninton

தமிழ் சினிமாவில் தனது தனித்துவமான நடிப்பாலும், கதை தேர்வாலும், பாடல் வரிகளிலும் பெரிதும் அறியப்பட்டவர்தான் நடிகர் தனுஷ். தனக்கென்று தயாரிப்பாளர், பாடலாசிரியர், இயக்குநர், நடிகர் என்ற பல முகங்களை கொண்டு தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளங்களை கொண்டவர்தான் இவர். தமிழில் மட்டுமின்றி பாலிவுட் முதல் ஹாலிவுட் வரை தனது பெயரை பதித்தவர்தான் இவர். சமீபத்தில் 'ராயன்' திரைப்படத்திற்காக தேசிய விருதும் பெற்றார், இந்நிலையில், தற்போது "நடிகர் தனுஷ் அரசியலில் குதிக்கப்போகிறார்" என்ற பேச்சு அடிபட்டுக்கொண்டே இருந்தது.

அதற்கான கொடியும் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது அவர் தன் அரசியலை எங்கிருந்து தொடுகிறார் என்று கூறியுள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் தனுஷின் ரசிகர் மன்றம் சார்பில் வந்த தகவலின்படி, "நமது அன்பு தலைவர் தனுஷ் அவர்களின் கோவை தெற்கு மாவட்ட தலைமைக்கு உட்பட்ட நற்பணி இயக்கங்கள் செயல்படும் தொகுதிகள் என்று 5 தொகுதிகள் பெயர் வெளியிடப்பட்டுள்ளது. அதில், கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி, தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி, கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதி, பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதி, வால்பாறை சட்டமன்ற தொகுதி என்று 5 தொகுதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

மேலும் அதில், மேற்கண்ட 5 தொகுதிகளுக்கு உட்பட்ட தலைவர் தனுஷ் நண்பர்கள் நற்பணி இயக்கம் தொடங்கவும், உறுப்பினர்களை சேர்க்கவும் கோவை தெற்கு மாவட்ட தலைவர் R. சதிஷ் குமார் அவர்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. அன்பு தலைவர் அவர்களின் வழியில் ஒன்றுபட்டு அனைவரும் செயல்படுவோம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் தனுஷ் தனது அரசியல் பயணத்தை தொடங்கப்போகிறார் என்று கூறப்படுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்