பொழுதுபோக்கு

பூதக்கண்ணடியால் சூரிய ஒளிக்கதிரை குவித்து காந்தி உருவப்படம் ...! அசத்திக் காட்டிய இளைஞர்..!

Malaimurasu Seithigal TV

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் இளைஞர் ஒருவா் மரப்பலகையில் காந்தியின் உருவப்படத்தை பூதக்கண்ணாடியால் குவித்து வரைந்து அசத்தியுள்ளார்.  

வருகின்ற ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை நினைவுக் கூறும் வகையில் மயிலாடுதுறை சேர்ந்த விக்னேஷ் தேசப்பிதா மகாத்மா காந்தியின் உருவப்படத்தை சூரிய ஒலிக்கதிர் கொண்டு பூதக்கண்ணாடியால் மரப்பலகையில் குவித்து பர்னிங் வுட் ஆர்ட் படைத்து அசத்தியுள்ளார்.

இதனை இணையதளத்திலும் பதிவிட்டுள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை தோப்புத் தெருவை சேர்ந்த விக்னேஷ் தனது திறமைகளால் பல்வேறு ஓவியங்களை சூரிய ஒளிக் கதிர் கொண்டு பூதக்கண்ணாடியால் மரப்பலகையில் குவித்து ஓவியம் வரைந்து வருகிறார்.

இந்த பர்னிங்ங் வுட் ஓவியம் இந்தியாவிலேயே இவர் ஒருவர் மட்டும்தான் ஓவியம் வரைந்து வருகிறார். தற்போது வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினம் வருவது ஒட்டி மயிலாடுதுறை அடுத்து தரங்கம்பாடிக்கு கடந்த இரு தினங்களுக்கு முன்பு சென்ற விக்னேஷ் டேனிஸ் கோட்டை முன்பு சுதந்திர தினத்தை நினைவு கூறும் வகையில் சுதந்திரப் போராட்ட வீரரும் தேச பிதா மகாத்மா காந்தியின் திருவுருவ படத்தை தனது திறமைகளால் சூரிய ஒளிக்கதிர் கொண்டு வரைந்து அசத்தி வருகிறார்.

மயிலாடுதுறை சேர்ந்த விக்னேஷ். தற்போது அவர் வரைந்த ஓவியத்தை அவரே வீடியோ ஒளிப்பதிவு செய்து இணையதளம் மூலம் பதிவிட்டுள்ளார். இந்த ஓவியம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரவி இருக்கிறது.