காவ்யா மாறன் - அனிருத் ரவிச்சந்தர் திருமண நிகழ்ச்சியை அடுத்து தற்போது சன் குழும ஊழியர்களுக்கு தங்க மோதிரம் கொடுத்ததோடு வரும் நவம்பர் 25-ம் தேதி நடைபெறும் விருந்திற்கு அழைப்பிதழ்கள் கொடுத்துள்ள கிஃப்ட் பாக்ஸ் வீடியோவை சன் குழும ஊழியர் ஒருவர் பகிர்ந்துள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரபல இசையமைப்பாளர் அனிருத்திற்கும், சன் டிவி நெட்வொர்க்கில் நிர்வாக இயக்குநராகவும், இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) அணியான சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் இருக்கும் தொழிலதிபரான காவ்யாவிற்கும் அனிருத்திற்கும் கடந்த நவம்பர் 11-ம் தேதி கிரீஸில் திருமணம் நடைபெற்றது. நீண்ட நாட்கள் காதலித்து வந்த காவ்யாவும், அனிருத்தும் நவம்பர் 11-ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமண விழாவில், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், மு. க. ஸ்டாலின், சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும், இவர்கள் இருவரும் சுயமரியாதை திருமணம் செய்துகொண்டதாகவும் கூறப்பட்டது. ஒருவருக்கொருவர் ஒரு செயின் ஒன்றினை பரிமாறி கொண்டுள்ளனர். திருமணம் முடிந்த பிறகு, இருவரும் தம்பதியினராக சென்னை விமான நிலையத்தில் காணப்பட்டனர். எளிமையான தோற்றத்தில் இருவரும் சென்னை வந்தடைந்தனர். இவர்களது திருமணம் வரவேற்பு நிகழ்ச்சியானது நவம்பர் 21 அன்று நடைபெறும் என்று கூறப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தென்னாப்பிரிக்காவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் தனது குடும்பத்துடன் ஏற்கனவே சென்னைக்கு வந்திறங்கியுள்ளார். இவர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் முன்னாள் வீரரும் பந்துவீச்சுப் பயிற்சியாளரும் ஆவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த விழாவில் நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள், அரசியல் மற்றும் முன்னணி பிரமுகர்கள் பலரும் இதில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
இந்நிலையில், காவ்யா மாறன் சன் குழும ஊழியர்களுக்கு பரிசளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். அந்த பரிசு பொருள் குறித்து ஊழியர் ஒருவர் வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த பெட்டியில் சாக்லேட், திருமண அழைப்பிதழ், தங்க மோதிரம் உள்ளிட்டவை இருந்துள்ளது. வழக்கமாக தங்க நாணயம் கொடுக்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில், மோதிரம் வழங்கியிருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், அவர்கள் அளித்திருந்த பத்திரிகையில் வரும் நவம்பர் 25-ம் தேதி மதிய உணவு விருந்து நடைபெறவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்த பரிசு அனைத்து ஊழியர்களுக்கும் வழங்கப்பட்டதா? என்பது குறித்த விவரங்கள் எதுவும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. ஆனால், இந்த பரிசு பொருளைப் பெற்ற ஊழியர்கள் மகிழ்ச்சியில் இருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.