பொழுதுபோக்கு

தேசிய கொடியை போர்த்தி ஹர்திக் பாண்டியா செய்த முகம் சுளிக்கும் செயல்… பதிவான வழக்கு!

இத்தகைய செயல் தேசிய கொடியை அவமதிப்பதாக உள்ளது என்றும் 1971 - தேசிய கௌரவ அவமதிப்பு தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு..

மாலை முரசு செய்தி குழு

நடந்து முடிந்த T20 உலகக்கோப்பை இறுதி போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்திய இந்திய அணி அபார வெற்றி பெற்று 3 வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. அதனை தொடர்ந்து இந்திய வீரர்களும் ரசிகர்களும் பெருமகிழ்ச்சியாக  வெற்றியை கொண்டாடி தீர்த்தனர். இந்தியா வீரர்கள் மைதானத்தில் ஒருவருக்கொருவர் கைகுலுக்கியும் கட்டி அனைத்தும் தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டாடினர். நாரேந்திர மோடி மைதானத்தில் இறுதிப்போட்டிக்கு பின் நடந்த கொண்டாட்டத்தில் ஆள் ரவுண்டர் ஹர்டிக் பாண்டியா தேசிய கொடியை தனது தோளில் போட்டு கொண்டாட்டத்தில் வலம்  வந்தார். பின் கொடியை மேலே போட்ட படியே தனது காதலியுடன் சுற்றி வந்தார் மேலும் மேடையிலேயே படுத்துக்கொண்டும் இருவரும் பலரும் முகம் சுழிக்கும் வகையில் நடந்துகொண்டார்.

இந்த புகைப்படங்களும் வீடியோக்களும்  சமூக வலைத்தளத்தில் வைரல் ஆனது. பின்னர் பலரும் அதை எதிர்த்து கருத்து தெரிவித்து வந்த நிலையில், புனைவை சேர்ந்த வழக்கறிஞர் வாஜித் கான் இது குறித்து சிவாஜி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில் இத்தகைய செயல் தேசிய கொடியை அவமதிப்பதாக உள்ளது என்றும் 1971 - தேசிய கௌரவ அவமதிப்பு தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்துள்ளார். இந்த சட்டத்தின் படி பொது இடங்களில் தேசிய கொடியை, அவமதிப்பு செய்தல் அல்லது ஆடையாக அணிவது ( இடுப்பு கீழ் கட்டுவது)  போன்ற செயல்கள் குற்றமாகும். ஹர்டிக் பாண்டியாவின்  இந்த செயல் சட்டத்தின் படி குற்றமாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் வழக்கறிஞர் வாஜித் கான், "நீங்கள் டி20 உலகக் கோப்பையை பைனல் பார்த்திருக்க வேண்டும். ஹர்திக் பாண்ட்யா தனது வெற்றியை கொண்டாடும் விதமாக அவரது காதலியுடன் நடனமாடி இருந்தார்.  தேசியக் கொடி அவரது முதுகில் கட்டப்பட்டிருந்தது. ஹர்திக் பாண்ட்யா தனது வெற்றியைக் கொண்டாடுவதில் மிகவும் தொலைந்து போனதால், அவர் தனது காதலியுடன் தேசியக் கொடியை அணிந்து படுத்துக் கொண்டார்.

இது நம்  தேசியக் கொடியை அவமதிப்பதாக இருக்கிறது” என்று புகார் அளித்துள்ளார். அதற்காக  பூனே சிவாஜி நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றுள்ளார், அங்கே காவல்துறையினர் ​​சம்பவம் இங்கே இல்லை மைதானத்தில் தானே என்று புகாரை ஏற்க மறுத்துள்ளனர். அதற்கு வழக்கறிஞர் “தேசியக் கொடி என்பது  முழு  தேசத்தின் சின்னம் என்றும், அதனால்  சிவாஜி நகர் காவல் துறையிடம் புகார் அளிக்கலாம்” என்றும் கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து அவரது புகாரை ஏற்றுக் கொண்டுள்ளனர் சிவாஜி நகர் போலீசார்.

இதை தொடர்ந்து கிரிக்கெட் ரசிகர்களும் சமூக ஆர்வலர்களும் இதற்கு கேள்வி எழுப்பியும் எதிர்ப்பு தெரிவித்தும் தங்களது  கருத்தை பகிர்ந்து வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்