பொழுதுபோக்கு

மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்ட ‘ஹிப்ஹாப் தமிழா யூடியூப் சேனல்’

நடிகரும் இசையமைப்பாளருமான ஹிப் ஹாப் ஆதியின், ஹிப்ஹாப்  தமிழா யூடியூப் சேனல் மர்ம நபர்கள் ஹேக் செய்துள்ளனர்.

Malaimurasu Seithigal TV

நடிகரும் இசையமைப்பாளருமான ஹிப் ஹாப் ஆதியின், ஹிப்ஹாப்  தமிழா யூடியூப் சேனல் மர்ம நபர்கள் ஹேக் செய்துள்ளனர்.

ஹிப் ஹாப் ஆதி இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் நடிகராவும் பிஸியாக இயங்கி வருகிறார். தற்போது அவர் நடிப்பில் ’அன்பறிவு’, ’சிவகுமாரின் சபதம்’ ஆகிய படங்கள் தயாராகி வருகின்றன. இதில் அன்பறிவு படம் இறுதி கட்டத்தில் இருந்து வருகிறது. மற்றொரு படமான ‘சிவகுமாரின் சபதம்’ படத்தில் ஆதி நடிப்பதோடு மட்டுமில்லாமல் இயக்கியும் வருகிறார். இது ஒருபுறம் இருக்க இவர் தனியாக ஹிப்ஹாப்  தமிழா என்ற பெயரில் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், ஹிப்ஹாப்  தமிழா யூடியூப் சேனல் மர்ம நபர்கள் ஹேக் செய்துள்ளனர். இரண்டு மில்லியன் சப்ஸ்கிரைப்  கொண்ட இந்த யூடியூப் சேனல் ஹேக் செய்யப்பட்டு அனைத்து வீடியோக்களையும் அழித்துள்ளனர். ஏற்கனவே நடிகை குஷ்புவின் ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது