பொழுதுபோக்கு

இவ்வளவு நெகட்டிவ் கமெண்ட்ஸ்க்கு மத்தியில் பீஸ்ட்டின் முதல்நாள் வசூல் இத்தனை கோடியா?

Tamil Selvi Selvakumar

தளபதி விஜய் நடித்த ’பீஸ்ட்’ திரைப்படம் நேற்று வெளியாகிய நிலையில் இந்த படத்திற்கு முதல் காட்சி முடிந்ததும் ஏகப்பட்ட நெகட்டிவ் விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் குவிந்து வந்தது. இருப்பினும் ஏற்கனவே அனைத்து காட்சிகளுக்கும் முன்பதிவு செய்யப்பட்டு இருந்ததால் நேற்று அனைத்து திரையரங்குகளிலும் ஹவுஸ்புல் காட்சிகளாக திரையிடப் பட்டன .

இந்த நிலையில் ’பீஸ்ட்’ படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல்கள் தெரியவந்துள்ளன. இந்த படம் தமிழகத்தில் 800 முதல் 850 திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்பட்டிருக்கும் நிலையில் தமிழகத்தில் மட்டும் 37 கோடி வசூல் செய்ததாகவும் மற்ற மாநிலங்களில் 15 முதல் 20 கோடி வசூல் செய்ததாகவும் தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் 50 கோடி முதல் 60 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாகவும் உலக அளவில் 70 கோடி ரூபாய் வசூல் செய்ததாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்த அதிகாரபூர்வ தகவலை சன் பிக்சர்ஸ் விரைவில் தனது  சமூக வலைதளப் பக்கத்தில் முதல்நாள் ’பீஸ்ட்’ படத்தின் வசூலை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ‘கேஜிஎப் 2 திரைப்படம் இன்று வெளியாகி உள்ளதை அடுத்து ’பீஸ்ட்’ படத்தின் வசூல் அடுத்தடுத்த நாட்களில் குறையும் வாய்ப்பு இருப்பதாக சமூகவலைதளங்களில் கூறப்பட்டு வருகிறது.