பொழுதுபோக்கு

நான் உங்கள் தீவிர ரசிகன்... இயக்குநர் கார்த்திக் சுப்புராஜை புகழும் மலையாள நடிகர் 

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் அவர்களின் மிகப்பெரிய ரசிகன் என மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் புகழ்ந்துள்ளார்

Malaimurasu Seithigal TV

தனுஷ் ரசிகர்களிடம் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும்  “ஜகமே தந்திரம்” திரைப்படத்தின் ட்ரெய்லரை  Netflix கடந்த வாரம் வெளியிட்டது. 

வெளியான கணத்திலேயே ரசிகர்களின் பேராதரவை பெற்ற  ட்ரெய்லர், இணையம் வழியே, உலகம் முழுதும் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. 

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருக்கும் இப்படத்தில் லோக்கல் கேங்ஸ்டராக தனுஷ் நடிக்க, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, பிரபல மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மாறுபட்ட நடிப்பில் மலையாளத்தில் பெரும் புகழை குவித்திருக்கும் நடிகர் ஜோஜு ஜார்ஜ்,  “ஜகமே தந்திரம்”  திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். 

ஜோஜு ஜார்ஜ் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் குறித்து கூறயதாவது: 

நான் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் அவர்களின் மிகப்பெரிய ரசிகன். “பீட்சா” படம் பார்த்து விட்டு அப்போதே இயக்குநரை சந்திக்க முயற்சித்தேன். ஆனால் முடியவில்லை. மலையாளத்தில் பிரபலமாக தொடங்கிய பிறகு தமிழிலும் வாய்ப்புகள் வரத்தொடங்கின. 

இறுதியாக இப்படத்தில் நடிக்க என்னை ஆடிசன் செய்தார் கார்த்திக். படத்தில் மிகப்பெரிய பாத்திரம் என்பதால் என்னிடம் ஒரு காட்சியை விவரித்து, நடித்து காட்ட சொன்னார். எனக்கு தெரிந்த அரைகுறை தமிழில், நான் அக்காட்சியை நடித்து காட்டினேன். ஆனால் அவர் என்னை புன்னகையுடன் ஏற்றுக்கொண்டார். நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன் என்றார்.