பொழுதுபோக்கு

விருதுகளை எதிர்பார்த்து நான் சினிமாவில் நடிக்கவில்லை .... விஜய் சேதுபதி

விருதுகளை எதிர்பார்த்து நான் சினிமாவில் நடிக்கவில்லை என நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

Malaimurasu Seithigal TV

தலைநகர் டெல்லியில் நாளைய தினம் திரைப்படத்திற்கான 67 தேசிய விருது வழங்கும் விழா நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக நடிகர் ரஜினிகாந்த், தனுஷ் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் டெல்லி சென்றுள்ளனர்.

அதில் "BEST SUPPORTING ACTOR" என்ற பிரிவில் நாளைய தினம் நடிகர் விஜய் சேதுபதிக்கு "சூப்பர் டீலக்ஸ்" திரைப்படத்தின் திருநங்கை காதப்பாத்திரத்திற்காக வழங்கப்படுகிறது. இந்நிலையில் இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய விஜய் சேதுபதி, கூறுகையில்,
          சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் என்பது இயக்குனர் குமார ராஜா மீது உள்ள நம்பிக்கையில் தான் நடித்தேன், இன்று தேசிய விருது கிடைத்துள்ளது. இவை நான் படப்பிடிப்பில் இருந்த நாட்களை நினைவுபடுத்துகிறது. திருநங்கையாக நடிப்பதே எனக்கு கஷ்டமாக இருந்தது என்றால் வாழ்வது அதனை விட கஷ்டமான ஒன்று! என தெரிவித்த அவர், சமூகம் அவர்களை எப்படி அனுகுகிறது என்பதை பொறுத்தே அமையும் என்றார். 

தென் மேற்கு பருவக்காற்று படத்திற்கு தேசிய விருது கிடைத்தது என் பாக்கியம்; அந்த படத்திற்கு பின்னரே நான் கவனிக்கப்பட்டேன். என்றுமே அவை ஒரு தனி சந்தோசம் தான் என கூறிய அவர்,  பலனை எதிர்பார்த்து வேலை செய்தார் வேலை கெட்டுவிடும் அதனால் எதிர்பார்ப்பு இல்லாமல் வேலை பார்க்க வேண்டும் என கூறினார்.