பொழுதுபோக்கு

இந்த படக்குழு எனது குடும்பமாக மாறிவிட்டது... - நடிகர் பரத்

‘லவ்’ படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் நடிகர்கள் பரத், வாணி போஜன் மற்றும் இயக்குனர் பேசிய கருத்துகள் பத்திரிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்புப் பெற்று வருகிறது.

Malaimurasu Seithigal TV

பரத் கதாநாயகனாக நடிக்கும் “லவ்” படத்தில், அவரது மனைவி மற்றும் கதாநாயகியாக வாணி போஜன், மற்றும் நண்பர்களாக விவேக் பிரசன்னா, டேனியல் அன்னி போப் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும், ராதா ரவி தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மலையாள படமான ‘லவ்’ படத்தின் தமிழாக்கமாக உருவாகியுள்ள நிலையில், இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது என்றே சொல்லலாம்.

RP Films சார்பில் R.P.பாலா தயாரித்து இயக்கத்தில், மாறுபட்ட திரைக்கதையில் மிரட்டலான திரில்லராக உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா படக்குவினர் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடந்தது. 

அதில் நடிகை வாணி போஜன் பேசியதாவது…

முதலில் பரத்துடன் இன்னொரு படம் உடனே நடிக்க வேண்டுமா ? என யோசித்தேன் ஆனால் இந்தக்கதை மிரள் படத்திலிருந்து மிகவும் மாறுபட்ட கதை. எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்தப்படத்தில் பரத்திடம் நிறைய அடி வாங்கினேன். நிறைய ஆக்சன் காட்சிகள் இருக்கிறது. பல சுவாரஸ்யங்கள் படத்தில் இருக்கிறது. இந்தப்படம் எங்களுக்கு மிக நெருக்கமான படம். உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன் நன்றி. 

நடிகர் பரத் பேசியதாவது...

இந்தப்படத்தின் கதை முழுக்க ஒரு அபார்ட்மெண்டில் நடப்பது, அதற்கேற்ற பரபரப்பான திரைக்கதை இருக்கிறது. திரைக்கதையில் நிறைய திருப்பங்கள் இருக்கிறது. இந்தப்படக்குழு என் குடும்ப நண்பர்கள் மாதிரி பழகினார்கள். RP Films R.P.பாலா தயாரிப்பாளராக மாறிவிட்டார். மிக நல்ல இயக்குநர். அவருடன் இந்தப்படத்தில் இணைந்தது மகிழ்ச்சி. என்னுடைய 50 வது படமாக இப்படம் அமைந்தது மகிழ்ச்சி. R.P.பாலா சாருக்கு நன்றி. P G முத்தையா சார் ஒளிப்பதிவு மட்டுமல்லாமல் இப்படத்திற்கு மிகப்பெரிய முதுகெலும்பாக இருந்துள்ளார்... அவருக்கு நன்றி. வாணி போஜனுடன் மிரள் படத்தில் நடிக்கும் போது இந்தக்கதை கேட்க சொன்னேன், அவர் உடனே பிடித்து இப்படத்தில் வந்தார். அவருக்கு எனக்கு இணையான பாத்திரம் மிகச் சிறப்பாக போட்டி போட்டு நடித்துள்ளோம். டேனி இதில் வித்தியாசமாக நடித்துள்ளார். விவேக் மிகச்சிறந்த ஆக்டர். இப்படம் உங்களை கண்டிப்பாகத் திருப்திப்படுத்தும்... அனைவருக்கும் நன்றி. 

இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் R.P.பாலா பேசியதாவது...

பரத்திடம் பல கதைகள் சொல்லி கடைசியில் இந்தக்கதை ஓகே ஆனது. P G முத்தையா சொல்லித்தான் இந்தப்படம் நடந்தது. அவர் என் நெருங்கிய நண்பர். என்னை விட அவர் தான் இந்தப்படத்திற்காக அதிகம் உழைத்துள்ளார். விவேக்கை கண்டிப்பாக இப்படத்தில் கொண்டு வந்து விடுங்கள் என்று பரத் சொன்னார். விவேக் சூப்பராக நடித்துள்ளார். டேனியல் என் நண்பர். பரத், வாணி போஜன்  இருவரும் பெரும் உழைப்பைத் தந்துள்ளார்கள். நான் அடுத்து எடுக்கும் படத்திற்கும் பரத் சார் தான்  ஹீரோ. டிரெய்லர் விழாவில் மீதம் சொல்கிறேன் எல்லோருக்கும் நன்றி.