பொழுதுபோக்கு

முதலில் சமந்தா தான் விவாகரத்து கேட்டது...சுத்த நான்சென்ஸ்...மீடியாவிடம் பொங்கி எழுந்த நாகர்ஜீனா!!

Tamil Selvi Selvakumar

கடந்த 2017 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்ட நாக சைதன்யாவும் சமந்தாவும் தங்களின் மணவாழ்க்கையை முடித்து கொள்வதாக அறிவித்தனர். 

திடீரென வெளியான இந்த அறிவிப்பு ரசிகர்களையும், பிரபலங்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. இவர்களின் பிரிவு குறித்து பல்வேறு காரணங்கள் சமூகவலைத்தளங்களில் உலா வந்தன. இதற்கு சமந்தா எதிர்ப்பு தெரிவித்தாரே தவிர விவாகரத்து குறித்து எந்த பதிலும் அளிக்கவில்லை.

சில நாட்களுக்கு முன் நடிகை சமந்தா தனது சமூக வலைதள பக்கங்களில் இருந்து நாக சைதன்யாவை பிரிவதாக அறிவித்திருந்த பதிவை நீக்கினார். இதனையடுத்து இருவரும் மீண்டும் சேர போகிறார்கள் என ரசிகர்கள் சந்தோசமடைந்தனர்.

இந்த நிலையில் நாக சைதன்யாவின் அப்பாவும் பிரபல தெலுங்கு நடிகருமான நாகர்ஜுனா சமீபத்தில் ஒரு பேட்டியில், ''சமந்தாதான் முதலில் விவாகரத்துக்கு விண்ணப்பித்ததார்” என்று நடிகர் நாகர்ஜீனா கூறியதாக செய்தி வெளியானது.

ஆனால், தற்போது  ‘நான் அப்படி சொல்லவே இல்லை’ என நாகர்ஜீனா மறுத்து டுவிட் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் "இந்த செய்தி முற்றிலும் பொய்யானது, சுத்த நான்சென்ஸ். வதந்திகளை செய்திகளாக வெளியிட வேண்டாம் என மீடியா நண்பர்களை கேட்டுகொள்கிறேன்" என அவர் கூறியுள்ளார்.