பொழுதுபோக்கு

இனப்படுகொலையை நான் ஒருபோதும் குறைத்து மதிப்பிடமாட்டேன் - சாய் பல்லவி!

Tamil Selvi Selvakumar

காஷ்மீர் பண்டிட்டுகள் வெளியேற்றம் குறித்து சாய் பல்லவி தெரிவித்திருந்த கருத்து சர்ச்சையை ஏற்பட்டுத்தியதை அடுத்து, அதற்கு விளக்கம் தெரிவித்து அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள்ளார்.

யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியின் போது, மதத்தின் பெயரால் நடக்கும் வன்முறைகள் கண்டனத்திற்கு உரியது என்றும், காஷ்மீர் பண்டிட்டுகளின் வெளியேற்றம் போல் பசு பாதுகாப்பு என்ற பெயரில் நடக்கும் வன்முறையும் தவறானது என நடிகை சாய் பல்லவி தெரிவித்திருந்தார்.

சாய் பல்லவியின் இந்த கருத்துக்கு சமூக வலைதளங்களில் கலவையான விமர்சனங்கள் வந்தன. இதையடுத்து இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நான் எப்போதும் பேசுவதற்கு முன்பு இரண்டு முறை யோசிப்பேன், இனப்படுகொலை போன்ற ஒரு சோகத்தை நான் ஒருபோதும் குறைத்து மதிப்பிடமாட்டேன் என கூறி இருந்தார்.